சியாமென் சர்வதேச திரைப்பட தலைநகர் என்ற திட்டப்பணியின் செய்தியாளர் கூட்டம் 23ஆம் நாள் சீனாவின் சியாமென் நகரில் நடைபெற்றது. சியாமென் சர்வதேச திரைப்படம் மற்றும் பண்பாட்டுத் தொழிற்துறை ஒன்றியத்தின் செயல் தலைவர் சோஷேங்லியாங் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் பேசுகையில், செப்டம்பர் திங்கள் பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்கள் சந்திப்பு சியாமென் நகரில் நடைபெறவுள்ளது. திரைப்பட ஒத்துழைப்பில் சியாமெனுக்கும் பிரிக்ஸ் நாடுகளுக்கும் மிக அதிக வாய்ப்புகளை இது விளைவிக்க உள்ளது என்று கூறினார்.
இந்த செய்தியாளர் கூட்டத்தில், சியாமென் மற்றும் இந்திய திரைப்படத் துறைகளுக்கிடையில் ஒத்துழைப்புக்கான பல விருப்பங்கள் எட்டப்பட்டுள்ளன. இரு தரப்பும், திரைப்படத் தலைநகர் என்ற திரைப்படத்துக்கான படப்படிப்பினை முன்னேற்றுவதோடு, சீன-இந்திய திரைப்பட அறிவியல் தொழில்நுட்ப கருத்தரங்கையும் கூட்டாக நடத்தவுள்ளன என்றும் அவர் கூறினார்.(ஜெயா)