• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன வானொலி நிலைய செய்தியாளர்களின் ஷான்ஷி பயணம்
  2017-04-24 15:28:40  cri எழுத்தின் அளவு:  A A A   

2017ஆம் ஆண்டு சீன வானொலி நிலையத்தைச் சேர்ந்த சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்கள் ஷான்ஷி மாநிலத்தில் பயணம் என்ற பெரிய நடவடிக்கை ஏப்ரல் 24ஆம் நாள் முற்பகல் ஷி அன் நகரில் துவங்கியது. 5 நாட்கள் நீடிக்கும் இப்பயணத்தில் பிரான்ஸ், சிங்கப்பூர், இந்தியா, மலேசியா உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டுச் செய்தியாளர்கள் அடங்கிய 70க்கும் மேலான செய்தியாளர்கள், ஷான்ஷி மாநிலத்தில் பயணம் மேற்கொள்வர்கள்.

ஷி அன் நகரிலுள்ள வெய்யாங், காவ்சின், ச்சுஜியாங், காங்வூ, சான்பா, ஷி ஷியே ஆகிய பிரதேசங்களிலும், பௌஜி, சியான்யாங் முதலிய நகரங்களிலும் இந்தச் செய்தியாளர் குழு பயணம் மேற்கொள்ளவுள்ளது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை, ஷான்ஷி தடையில்லா வணிக மண்டலத்தின் ஆக்கப்பணி, நவீன தொழில் துறையின் உருவாக்கம், பண்பாட்டுச் செழுமையை முன்னேற்றும் புதிய வழிமுறைகள் ஆகியவை குறித்து, அவர்கள் அறிந்து கொண்டு, செய்திகளை வெளியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (பூங்கோதை)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040