• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தமிழக விவசாயிகளின் ஆர்ப்பாட்டம் தொடர்
  2017-04-24 16:57:56  cri எழுத்தின் அளவு:  A A A   

தங்களது கோரிக்கையை அரசு சரியாகக் கையாளும் என்ற நம்பிக்கையின் பொருட்டு, தில்லியில் ஒரு திங்கள் காலமாக ஆர்பாட்டத்தை நிறுத்துவதென இந்நடவடிக்கையின் தலைவர் பி. அய்யாக்கண்ணு செய்தியாளரிடம் தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஞாயிற்றுகிழமை தில்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைச் சந்தித்து, வறட்சியால் பாதிக்கப்பட்ட அவர்களின் நிலைமையை தலைமை அமைச்சர் மோடியிடம் நேரில் தெரிவிப்பதாக வாக்குறுதி அளித்தார்.சக விவசாயிகள் மற்றும் அரசியல் அமைப்புகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாட்டிலிருந்து வந்த 100க்கும் அதிகமான விவசாயிகள் தில்லியில் கடந்த 41 நாட்களாக ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.

அரசு வங்கிகளிலுள்ள விவசாயிகளின் கடன்களை நீக்குவது, வறட்சி மீட்பு நடவடிக்கைகள், வேளாண் பொருட்களின் விலையை உயர்த்துவது, பாசன மற்றும் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க மாநிலங்களுக்கிடையேயான ஆறுகளை நாட்டின் மேலாண்மையில் சேர்ப்பது உள்ளிட்டவை அவர்களின் கோரிக்கைகள் ஆகும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040