• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆப்கானிலுள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது தாக்குதல்
  2017-04-25 10:23:03  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆப்கானிஸ்தான் கிழக்கிலுள்ள ஹோஸ்ட் மாநிலத்தில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளம் ஒன்றின் அருகில் வாகனக் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் குறைந்தது 5 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமுற்றனர் என்று ஆப்கான் அதிகாரி ஒருவர் 24ஆம் நாள் தெரிவித்தார்.

இது குறித்து, ஹோஸ்ட் மாநிலக் காவல்துறையின் பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், இத்தாக்குதல் நடத்திய நபர் ஹோஸ்ட் நகரிலுள்ள காவல் நிலையம் ஒன்றை கடந்து சென்ற போது வாகனத்தை வெடிக்கச் செய்துள்ளார். இதில் அவரும் பாதுகாப்பு படைவீரர் 4 பேரும் உயிரிழந்தனர். ஆனால் இதுவரை வெளிநாட்டுப் படைவீரர்களுக்கான பாதிப்பு பற்றிய தகவல் ஏதுமில்லை என்று தெரிவித்தார்.(வான்மதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040