• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வட கொரிய அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய 3 நாடுகளின் கலந்தாய்வு
  2017-04-25 18:15:09  cri எழுத்தின் அளவு:  A A A   
வட கொரிய அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய 6 தரப்புப் பேச்சுவார்த்தைக்கான ஜப்பான், அமெரிக்கா, தென் கொரியா ஆகிய 3 நாடுகளின் பிரதிநிதிகள் ஏப்ரல் 25ஆம் நாள் டோக்கியோவில் கலந்தாய்வு நடத்தி, கொரியத் தீபகற்ப பிரச்சினை குறித்து விவாதித்தனர்.

கட்டுப்பாட்டை கடைபிடுக்கும்படி வட கொரியாக்கு மேலும் வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்று இம்மூன்று தரப்புகள் உடன்பாட்டை எட்டியுள்ளதாக ஜப்பானின் வெளியுறவு அமைச்சகத்தின் ஆசிய-ஓஷானிய நிறுவனத்தின் தலைவர் கென்ஜி கனுசுகி தெரிவித்தார்.

இப்பிரதிநிதிகள் பிப்ரவரி திங்களின் இறுதியில் வாஷிங்டனில் கலந்தாய்வு நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. (பூங்கோதை)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040