• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வாங்யீ ஜெர்மனி தலைமையமைச்சருடன் சந்திப்பு
  2017-04-26 09:40:01  cri எழுத்தின் அளவு:  A A A   
ஜெர்மனியில் அதிகாரப்பூர்வமான பயணம் மேற்கொண்டு, 3ஆவது சுற்று சீன-ஜெர்மனி தூதாண்மை மற்றும் பாதுகாப்பு நெடுநோக்குப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீவை ஜெர்மனி தலைமையமைச்சர் ஏஞ்சலா மெர்கெல் அம்மையார் 25ஆம் நாள் பெர்லினில் சந்தித்தார்.

இரு நாட்டுறவில் எட்டியுள்ள ஆக்கப்பூர்வ முன்னேற்றங்களை மெர்கெல் வெகுவாக பாராட்டினார். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் முன்வைத்த ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவை ஆதரிப்பதாகவும் அவர் கூறினார்.

வாங்யீ பேசுகையில், ஜெர்மனித் தரப்பின் உயர்நிலைப் பிரதிநிதி சீனாவிற்குச் சென்று, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை சர்வதேச ஒத்துழைப்பின் மன்றக் கூட்டத்தில் கலந்து கொள்வதை சீனா வரவேற்பதாக கூறினார்.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040