2017ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டு சரக்குப் போக்குவரத்து செயல்பாட்டு அறிக்கையின்படி, சீனச் சமூகத்தின் சரக்குப் போக்குவரத்து மொத்த தொகை 56 இலட்சத்து 7 ஆயிரம் கோடி யுன்னாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 7.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. சீனாவின் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவு சம்மேளனமும், சீனாவின் சரக்கு போக்குவரத்து தகவல் மையமும் 26ஆம் நாள் இத்தகவலை வெளியிட்டது.
தொடர்புடைய ஆய்வு தரவுகளின்படி, சீனத் தேசிய பொருளாதாரத்தின் அதிகரிப்புடன் இணைந்து, சரக்குப் போக்குவரத்துத் தேவை அளவு நிதானமாக உயர்ந்துள்ளது.
2017ஆம் ஆண்டில், சரக்குப் போக்குவரத்துச் சந்தையின் அளவு தொடர்ந்து விரிவாகி வருகிறது. இவ்வாண்டின் முதல் காலாண்டின் போது, சரக்கு போக்குவரத்து துறையின் மொத்த வருமானம் 2 இலட்சம் கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 12.8 விழுக்காடு அதிகரித்துள்ளது.