நாட்டின் நிதி பாதுகாப்பு தொடர்பாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு 25ஆம் நாள் ஆய்வுக் கூட்டத்தை நடத்தியது.
நிதி பாதுகாப்பு, தேசிய பாதுகாப்புத் துறையில் ஒரு முக்கிய பகுதியாகும். பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக வாழ்வில் நிதியின் முக்கிய தகுநிலையையும் பங்கினையும் முழுமையாக அறிந்து கொண்டு, நிதி பாதுகாப்பை பேணிக்காப்பதை நாட்டின் ஆட்சியில் பெரிய விடயமாக கொண்டு நிதிப் பணிகளை செவ்வனே செய்ய வேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.