• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கும் தலிபான் அமைப்புக்குமிடையிலான மோதல்
  2017-04-27 09:09:38  cri எழுத்தின் அளவு:  A A A   
அண்மையில், ஆப்கானிஸ்தானின் உள்ளூர் ஜோவ்ஜென் மாநிலத்தில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஆப்கானிஸ்தான் கிளை ஆயுததாரிகளுக்கும் தலிபான் ஆயுததாரிகளுக்கும் இடையே கடுமையான மோதல் நிகழ்ந்துள்ளது. இதில் குறைந்தது 91 பேர் உயிரிழந்தனர் என்று அரசு அதிகாரி ஒருவர் 26ஆம் நாள் கூறினார்.
தலிபான் அமைப்பைச் சேர்ந்த 76 பேர் உயிரிழந்தனர், 56 பேர் காயமடைந்தனர். ஐ.எஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 15 பேர் உயிரிழந்தனர், 12 பேர் காயமடைந்தனர் என்று ஜோவ்ஜென் மாநில அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் செய்தி ஊடகங்களிடம் கூறினார்.(சிவகாமி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040