• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்காவின் வரி வசூலிப்பு சீர்திருத்தம்
  2017-04-27 10:56:25  cri எழுத்தின் அளவு:  A A A   
வரி வசூலிப்பு சீர்திருத்தத் திட்டத்தை அமெரிக்க அரசு 26ஆம் நாள் வெளியிட்டது. இத்திட்டப்படி, நிறுவன வரியும் தனிநபர் வருமான வரியும் பெருமளவில் குறைக்கப்படும். இது குறித்து அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் பேசுகையில், இது மிகவும் சிறப்பான திட்டமாகும். இதன் மூலம் கூடுதலான அமெரிக்கர்கள் மீண்டும் வேலை வாய்ப்புகளைப் பெறுவர் என்று தெரிவித்தார்.

வெள்ளை மாளிகையின் தேசிய பொருளாதாரக் கமிட்டித் தலைவர் காரி கோன், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்டீவென் முனுச்சின் ஆகியோர் 26ஆம் நாள் மாலை செய்தி ஊடகங்களிடம் இத்திட்டத்தின் சில அம்சங்களை அறிமுகம் செய்தனர்.

திட்டப்படி, நிறுவன வரி 35 விழுக்காட்டிலிருந்து 15 விழுக்காடாகக் குறைக்கப்படும். தனிநபர் வருமான வரி 7 நிலைகளிலிருந்து 3 நிலைகளாகக் குறைக்கப்படும். அவை முறையே 10 விழுக்காடு, 25 விழுக்காடு மற்றும் 35 விழுக்காடு ஆகும். மேலும், தனிநபர் வருமான வரி வசூலிப்பின் தொடக்க நிலை சுமார் ஒரு மடங்கு உயர்த்தப்படும்.

இத்திட்டம், 1986ஆம் ஆண்டு முதல் இதுவரை அமெரிக்கா வெளியிட்ட மிக முக்கியமான வரி வசூலிப்பு சீர்திருத்தத் திட்டமாகும். அமெரிக்க வரலாற்றில் மிக பெரிய வரி குறைப்புத் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.(வான்மதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040