• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-ஐரோப்பிய பயணியர் விமான சேவை ஒத்துழைப்பு
  2017-04-27 14:11:02  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனா தயாரித்துள்ள சி 919 எனும் பெரிய ரக பயணியர் விமானத்தின் பறத்தல் தகுதி, தற்போது, சீன பயணியர் விமானப் பணியகத்தால் சோதிக்கப்பட்டு வருகிறது. இச்சோதனை, சீன-ஐரோப்பிய விமான பறத்தல் தகுதி தொடர்பான இரு தரப்பு பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக திகழ்கிறது.

27ஆம் நாள் ஷாங்காயில் துவங்கிய முதல் சீன-ஐரோப்பிய பயணியர் விமான சேவைப் பாதுகாப்புக்கான ஆண்டுக் கூட்டத்தில் இத்தகவல் கிடைத்தது.

தற்போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளுடன் இரு தரப்பு பயணியர் விமான சேவை உடன்படிக்கைகளில் சீனா அதிகாரப்பூர்வமாகக் கையொப்பமிட்டுள்ளது. அதன் 15 உறுப்பு நாடுகளுடன் நேரடி பறத்தல் நெறிகளை சீனா திறந்து வைத்துள்ளது என்று அறியப்படுகிறது.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040