• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் சி919 பயணியர் விமானத்தின் முதல் வான் பயணம்
  2017-05-05 14:26:47  cri எழுத்தின் அளவு:  A A A   

மேலும், சி919 விமானத்தில் தற்போதைய மிக முன்னேறிய வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, புதிய உணர்கருவி நிறுவப்படுவதால், புகைமூட்டம் போன்ற கடுமையான வானிலையிலும் விமானம் பாதுகாப்புடன் வானில் ஏறி, தரையில் இறங்கலாம் என்றும் அவர் கூறினார்.

சி919, சீனா சொந்தமாக ஆய்ந்து வடிமைத்து தயாரித்துள்ள முதல் பெரிய ரக பயணியர் விமானமாகும். முதல்முறையாக பறக்கும் சோதனையை முடித்த பிறகு, ஆய்வுப் பணிகள் புதிய காலக்கட்டத்திற்குள் நுழையும். எதிர்காலத்தில், சோதனைக்காக 6 விமானங்கள் தயாரிக்கப்படும். இவை, வேறுபட்ட சோதனைப் பணிகளை நிறைவேற்றும். அதன் மூலம் பணியின் முன்னேற்றப் போக்கு விரைவுபடுத்தப்படும்.

சி919 விமானத்தின் ஆய்வுத் திட்டத்தின்படி, எதிர்காலத்தில், வான் போக்குவரத்துக்கு பொருத்தமான பறத்தல் சோதனைகள் மேற்கொள்ளப்படும். விமானத்தின் பல்வகை செயல்திறன்களை நிச்சயப்படுத்துவதன் மூலம், பறக்கும் சான்றிதழை பெற வேண்டும். இறுதியாக, அது சந்தைக்கு வந்து தனது சேவை அளிக்கும் என்று அறியப்படுகிறது.

தற்போது, 23 பன்னாட்டு நிறுவனங்கள், 570 சி919 விமானங்களை முன்பதிவு செய்துள்ளன. முதல் வான் பயணம் நிறைவுபெற்ற பிறகு, இவ்விமானத்தின் சந்தை வாய்ப்பு மீது மேலதிக நம்பிக்கை கொள்வதாக, விமானத்தின் துணை வடிவமைப்பாளர் ஃபூ கோஹுவா தெரிவித்தார்.

எதிர்காலத்தில், சீனப் பொருளாதார வளர்ச்சியுடன், குறைந்தது 2000 விமானங்கள் என சந்தைத் தேவை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
• பெய்ஜிங் மாநகரில் நிலக்கரி பயன்பாடு குறைவு
• குஜராத் வெள்ளம்:100க்கு அதிகமானோர் சாவு
• பாதுகாப்பு விவகாரம் தொடர்பான ஐரோப்பிய ஆணைய அறிக்கை
• அயர்லாந்தில் திபெத் பிரிதநிதிக்குழுவின் பயணம்
• சிரியாவில் மோதல் குறைப்பு பிரதேசத்தில் அனுப்பப்பட்ட முதலாவது மீட்புப் பொருட்கள்
• ரஷியா, ஈரான், வட கொரியா மீது அமெரிக்காவின் புதிய தடை நடவடிக்கை
• சீனாவில் செவ்வாய் கிரக கிராமத் திட்டம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040