• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை நெடுகிலுள்ள பிரதேசத்தில் சீன நடுவண் தொழில் நிறுவனங்களின் திட்டப்பணிகள்
  2017-05-08 15:13:07  cri எழுத்தின் அளவு:  A A A   
கடந்த 3 ஆண்டுகளில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை நெடுகிலுள்ள நாடுகளில் சீனாவின் 47 நடுவண் அரசு தொழில் நிறுவனங்கள் பங்கு அளிக்கும் ஒத்துழைப்புத் திட்டப்பணிகளின் எண்ணிக்கை 1676 என்று சீன அரசவையின் அரசுச் சொத்துக்கள் கண்காணிப்பு மற்றும் நிர்வாக ஆணையத்தின் இயக்குநர் சியாவ்யாச்சிங் 8ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக்கான கூட்டுப் பங்களிப்பு பற்றிய செய்தியாளர் கூட்டத்தில் அவர் மேலும் கூறுகையில், இந்த திட்டப்பணிகளின் கட்டுமானம் மற்றும் நிறைவேற்றல், உள்ளூர் சமூகம் மற்றும் பிரதேசத்தின் வளர்ச்சியை முன்னேற்றியுள்ளது. அதோடு, நடுவண் அரசு தொழில் நிறுவனங்கள் இதன் மூலம் வெளிநாட்டில் முதலீடு செய்வதற்கான அனுபவங்களையும் பெற்றுள்ளன என்று கூறினார்.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040