• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற மன்றக் கூட்டத்தின் துவக்க விழாவில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் முக்கிய உரை
  2017-05-14 10:58:26  cri எழுத்தின் அளவு:  A A A   

சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற மன்றக் கூட்டம் மே 14ஆம் நாள் காலை சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் துவங்கியது. அதன் துவக்க விழாவில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்தினார். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்பதை, அமைதி, செழுமை, திறப்பு, புத்தாக்கம், நாகரிகம் ஆகியவை உள்ளடங்கும் பாதையாகவே கட்டியமைக்க பல்வேறு தரப்புகளும் முயற்சிகளை செய்ய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

ஷிச்சின்பிங் தனது உரையில் பேசுகையில்

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவு ஆரம்பிக்கப்பட்டது முதல் கடந்த 4 ஆண்டுகளில் சீனாவுக்கும் தொடர்புடைய நாடுகளுக்கும் இடையே கொள்கைத் துறைப் பரிமாற்றம், வசதிகளின் ஒன்றிணைப்பு, தடையற்ற வர்த்தகம், நிதி திரட்டல், மக்களிடையேயான தொடர்பு ஆகியவற்றில் முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன. 2014 முதல் 2016ஆம் ஆண்டு வரை, சீனாவுக்கும் இந்த முன்மொழிவின் நெடுகிலுள்ள நாடுகளுக்கிடையேயான மொத்த வர்த்தகத் தொகை 3 லட்சம் கோடி அமெரிக்க டாலரை எட்டியது. 5000 கோடி அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. சீனாவின் தொழில் நிறுவனங்கள், இந்த நாடுகளுக்கு 110 கோடி அமெரிக்க டாலர் வரி வசூலையும் 1.8 லட்சம் வேலை வாய்ப்புகளையும் உருவாக்கின. இந்த சாதனைகளின் மூலமாக, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவு, கால ஓட்டத்திற்கு ஏற்றதாகவும், பல்வேறு நாடுகளில் உள்ள மக்களின் நலன்களுக்குப் பொருந்தியதாகவும் உள்ளது. இந்த முன்மொழிவுக்கு பரந்த எதிர்காலம் உண்டு என்று கூறினார்.

1  2  3  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040