• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தென் கொரியா மற்றும் அமெரிக்க அரசுத் தலைவர்கள் சந்திப்பு
  2017-05-17 09:03:15  cri எழுத்தின் அளவு:  A A A   

தென் கொரிய அரசுத் தலைவர் மூன் ஜே-இனும் அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்பும் அடுத்த ஜுன் திங்களின் இறுதியில் அமெரிக்காவின் வாஷிங்டனில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தென் கொரிய அரசுத் தலைவர் மாளிகை 16-ஆம் நாள் தெரிவித்தது.

தென் கொரிய அரசுத் தலைவர் மாளிகையின் பொது அறிக்கைக்குப் பொறுப்பேற்கும் முதன்மைச் செயலாளர் யூன் யங்-சன் கூறுகையில், அரசுத் தலைவர் மாளிகையின் தூதாண்மை பாதுகாப்புப் பணிக் குழுத் தலைவர் சுங் இய்-யங், தென் கொரியாவில் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆணையத்தைச் சேர்ந்த ஆசிய விவகாரத்துக்கான உயர் அதிகாரி மேட் போட்டிங்கரைச் சந்தித்துரையாடினார் என்றார். வட கொரியா முழுமையாக அணு ஆயுதங்களை ரத்து செய்யும் இலக்கை நனவாக்கும் வகையில், தென் கொரியாவும் அமெரிக்காவும் தடை நடவடிக்கை, பேச்சுவார்த்தை உள்ளிட்ட பல்வகை வழிமுறைகளை மேற்கொள்ளும் என்று இரு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளதாக யூன் யங்-சன் கூறினார்.(தேன்மொழி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040