• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிட்டனின் ஒத்துழைப்புக்கு ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள்
  2017-05-18 09:34:40  cri எழுத்தின் அளவு:  A A A   

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது பற்றிய பேச்சுவார்த்தை மேற்கொள்ளும்போது, பிரிட்டன் தரப்புக்கு தொல்லைகள் மற்றும் பிரச்சினைகளை தரும் எண்ணம், பிரசல்ஸ் தரப்புக்கு இல்லை என்று இப்பேச்சுவார்த்தைக்கான ஐரோப்பிய ஆணையத்தின் முதன்மை பிரதிநிதி மிஷெல் பர்ணியர் 17-ஆம் நாள் தெரிவித்தார்.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பர்ணியர் உரைநிகழ்த்தியபோது, பிரிட்டன் தலைமையமைச்சர் தெரசா மே அம்மையார் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒத்துழைப்பை நிலைநிறுத்த வேண்டும் என்றும், பகைமை மனப்பான்மையுடன் செயல்படக் கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

பிரசல்ஸ் தரப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் சில உறுப்பு நாடுகளுடன் இணைந்து பிரிட்டனை எதிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளக் கூடும் என்று தெரசா மே தெரிவித்திருந்தார்.

தவிர, வரும் ஜுன் திங்கள் நடைபெற உள்ள பிரிட்டன் பொது தேர்தல், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது பற்றிய பேச்சுவார்த்தையை நிதானப்படுத்த வேண்டும் என்று பர்ணியர்  விருப்பம் தெரிவித்தார்.(தேன்மொழி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• காஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் இடையே துப்பாக்கிச் சண்டை
• வங்காளதேசத்தில் நிலக்கரி மின்சார நிலையங்களின் கட்டுமானம்
• ஸ்காட்லாந்தில் சீன மேற்குப் பகுதி பண்பாட்டின் பரப்புரை
• சிரியா பிரச்சினைக்கு தீர்வு பற்றி சீனாவின் கருத்து
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை தொடர்பான கருத்துரு
• ஈராக் இராணுவத்தின் வான் தாக்குதலில் ஐஎஸ் தீவிரவாதிகள் சாவு
• அமெரிக்கா:ஐ.எஸ் அதியுயர் தலைவர் இன்னும் உயிர்
• பாகிஸ்தான்:காஷ்மீர் பகுதியில் இந்தியப் படை தாக்குதல் நடத்துதல்
• பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி தொடங்கி  2 ஆண்டுகள் நிறைவு
• டீசல் பயன்பாட்டைக் குறைக்க தொடரியில் சூரிய தகடு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040