• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் வாகன விபத்து
  2017-05-19 09:39:59  cri எழுத்தின் அளவு:  A A A   
அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் 18ஆம் நாள் பயணிகளின் மீது வாகனம் ஒன்று மோதியதில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்தார். 22 பேர் காயமுற்றனர். நியூயார்க் நகராட்சித் தலைவர் பீல் டே பிலாசியொ பேசுகையில், இது பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடையதா என்ற தகவல் தற்போது இல்லை என்று தெரிவித்தார்.

வாகன ஓட்டுநர் நியூயார்க் நகரவாசி. குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த அவர் தற்போது காவல்துறையினால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான புலனாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஸ்பைசர் சுட்டுரையில் வெளியிட்ட கருத்தில், இச்சம்பவம் மற்றும் இது தொடர்பான புலனாய்வு மீது அரசுத் தலைவர் டிரம்ப் கவனம் செலுத்தி வருகிறார் என்று தெரிவித்தார்.(வான்மதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040