• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனா:உலகில் மிகப் பெரிய தேயிலை தயாரிப்பு நாடு
  2017-05-19 10:09:08  cri எழுத்தின் அளவு:  A A A   

உலகில் மிகப் பெரிய தேயிலை தயாரிப்பு மற்றும் தேயிலை நுகர்வுச் சந்தையாக சீனா மாறியுள்ளது. 2016ஆம் ஆண்டில், சீனாவில் தேயிலை பூங்காவின் பரப்பளவு 28 இலட்சத்து 70 ஆயிரம் ஹெக்டராகும். இதன் உற்பத்தி அளவு 24 இலட்சம் டன்னாகும். தேயிலை பயிரிடும் அளவில், சீனா, உலக அளவில் முதலிடத்தை வகிக்கிறது. சீனாவின் மொத்த தேயிலை நுகர்வு 20 இலட்சம் டன்னைத் தாண்டியுள்ளது.
18ஆம் நாள் நடைபெற்ற முதலாவது சீன சர்வதேசத் தேயிலை பொருட்காட்சியின் துவக்க விழாவின் போது, சீன வேளாண் துறை அமைச்சர் ஹான்சாங்ஃபூ இதனைத் தெரிவித்தார்.
சுமார் ஆயிரம் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுத் தொழில் நிறுவனங்கள் இப்பொருட்காட்சியில் கலந்துகொண்டுள்ளன. கருப்புத் தேயிலை, பச்சை தேயிலை உள்ளிட்ட 6 பிரிவுகளில் ஆயிரக்கணக்கான தேயிலை வகைகள் இதில் இடம்பெற்றுள்ளன. (சரஸ்வதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040