• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
புதிதாக 10 அணு உலைகள் – கட்டியமைக்க இந்தியா திட்டம்
  2017-05-19 10:59:46  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்தியாவில் மின்சார உற்பத்தி ஆற்றலை அதிகரிக்கும் வகையில் புதிதாக 10 அணு உலைகளை கட்டியமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஆற்றல் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது கூறுகையில், உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் இந்த 10 அணு உலைளும் அமைக்கப்பட உள்ளன என்று தெரிவித்தார்.

மாசில்லாமல், 7 ஆயிரம் கிலோ வாட் மின்னாற்றல் இந்த புதிய அணு உலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த அணு உலைகள் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், கர்நாடகம் மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்களில் அமைக்கப்பட உள்ளன.

நாட்டில், தற்போது செயல்பட்டு வரும் 22 அணு உலைகள் மூலம் 6,780 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. 2022ஆம் ஆண்டுக்குள் மேலும், 6,700 மெகா வாட் மின்னாற்றல் உற்பத்தி செய்யப்படும் என்று நம்பப்படுகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• திபெத் மொழி தேடுபொறியின் முதலாவது ஆண்டு நிறைவு
• செல்லிடப்பேசி மூலம் பணம் செலுத்துவதில் சீனா முதலிடம்
• வட கொரியாவின் செயலுக்கு அமெரிக்கா வரவேற்பு
• சிரியாவில் பன்னாட்டு ஒன்றியத்தின் தாக்குதலில் அப்பாவி மக்களின் உயிரிழப்பு
• ஆப்கானில் அமெரிக்காவின் புதிய கொள்கைக்கு எதிரொலிப்பு
• ஈராக் ஒருமைப்பாட்டுக்கு அமெரிக்கா ஆதரவு
• குட்ரேஸ்:ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை பற்றிய பன்முக உடன்படிக்கைக்கு ஆதரவளிக்க வேண்டும்
• டோங்லாங் பிரச்சினை பற்றி இருநாடுகளின் கருத்துக்கள்
• அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரின் ஈராக் பயணம்
• ரஷியா: சிரியா அரசுப் படை அலிபோவை மீட்டுள்ளது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040