• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-அமெரிக்க தூதாண்மை பரிமாற்றம்
  2017-05-20 16:53:42  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசவை உறுப்பினர் யாங்சியேச்சு 20ஆம் நாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சூனுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார்.

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் ஆகியோரின் சந்திப்புக்கு பின், இரு நாட்டுறவு புதிய ஆக்கப்பூர்வமான முன்னேற்றத்தைப் பெற்றது. அடுத்த கட்டத்தில், இரு நாட்டு அரசு தலைவர்களும் எட்டியுள்ள பொதுக் கருத்துக்களை இரு தரப்பும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி, உயர் நிலை மற்றும் பல்வேறு நிலைகள் பரிமாற்றத்தை நிலைநிறுத்தி, நூறு நாள் பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தை முன்னேற்றி, பல்வேறு துறைகளில் யதார்த்த ஒத்துழைப்பை விரிவுபடுத்தி, முக்கிய சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சினைகளில் பரிமாற்றத்தையும் ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்த வேண்டும் என்று யாங்சியேச்சு தெரிவித்தார்.

சீனாவுடன் கலந்தாய்வை வலுப்படுத்த வேண்டுமென அமெரிக்கா விருப்பம் தெரிவிப்பதாக டில்லர்சுன் கூறினார். அமெரிக்க-சீன தூதாண்மை பாதுகாப்புக்கான முதல் சுற்று பேச்சுவார்த்தையின் ஆயத்த பணிகளைச் செவ்வனே மேற்கொள்ள வேண்டும். இப்பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமான சாதனைகளைப் பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.(மோகன்)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040