• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஏபெக் அமைப்பின் வர்த்தக அமைச்சர்கள் கூட்டம்
  2017-05-21 15:36:26  cri எழுத்தின் அளவு:  A A A   

ஏபெக் எனும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 23ஆவது வர்த்தக அமைச்சர்கள் கூட்டம் 20ஆம் நாள் வியட்நாம் தலைநகர் ஹனோயில் நடைபெற்றது. நடுத்தர, சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களின் போட்டியாற்றல் மற்றும் புத்தாக்க ஆற்றலை உயர்த்துவது, வட்டாரப் பொருளாதார ஒருமைப்பாட்டை முன்னேற்றுவது ஆகியவை பற்றி இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. சீனா முன்வைத்த ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் முன்மொழிவு, பிரதேசங்களுக்கிடையே ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்வதை விரைவுபடுத்துவதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கையாகும் என்று ஏபெக் அமைப்பின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர்.

ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் செழுமையை விரைவுபடுத்தும் பொருட்டு, சந்தை ஒன்றிணைப்பு மற்றும் வர்த்தகத்தை ஏபெக் அமைப்பின் உறுப்பு நாடுகள் விரிவாக்கி, ஒத்துழைப்பைத் தூண்ட வேண்டும் என்று வியட்நாம் தலைமையமைச்சர் குயென் சுவன் புக் இக்கூட்டத்தின் துவக்க விழாவில் வேண்டுகோள் விடுத்தார்.

இணக்கமும், புத்தாக்கமும் கொண்டுள்ள தொடரவல்ல அதிகரிப்பை விரைவுபடுத்துவது குறித்து சீன வணிக அமைச்சர் சுங் ஷான் உரை நிகழ்த்தினார். ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் மேலும் தலைசிறந்த புத்தாக்கச் சூழலை உருவாக்கி, ஏபெக் அமைப்பின் புத்தாக்க மேம்பாட்டை நிலைநிறுத்த வேண்டும் என சீனா வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040