• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லீக்கெச்சியாங்கின் பயணம் பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் கூட்டம்
  2017-05-28 15:41:58  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன தலைமையமைச்சர் லீக்கெச்சியாங் மே 31 முதல் ஜூன் 2ஆம் நாள் வரை, ஜெர்மனியில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார். அப்போது, சீன-ஜெர்மனி தலைமை அமைச்சர்களின் ஆண்டுக்கான சந்திப்பு, பிரசல்சில் நடைபெறும் 19ஆவது சீன-ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் சந்திப்பு ஆகியவற்றில் கலந்து கொள்ளவுள்ளார். தொடர்ந்து, பெல்ஜியத்தில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். தொடர்புடைய நிலைமை பற்றி, 27ஆம் நாள், சீன வெளியுறவு அமைச்சகத்தின் துணைத் தலைவர் வாங்சாவ், வணிக அமைச்சரின் துணையாளர் லீச்சேங்காங், செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தனர்.

சீன-ஐரோப்பிய ஒன்றிய நெடுநோக்கு பரஸ்பர நம்பிக்கை மற்றும் பயனுள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி, தற்போதைய நிலைமையில் ஜெர்மனி, பெல்ஜியம், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவை முன்னேற்றுவதற்கு இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று வாங்சாவ் கூறினார்.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040