• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒரு மாதம் தொடரும் சர்வதேச சுற்றுலா விழா
  2017-05-29 15:30:13  cri எழுத்தின் அளவு:  A A A   
அழகிய கான்சூவில் பயணம் மேற்கொண்டு பட்டுப்பாதை சுற்றுலாவை வளர்ப்பது என்ற தலைப்பில் 7ஆவது துன்ஹுவாங் பயணம் மற்றும் பட்டுப்பாதை சர்வதேச சுற்றுலா விழா வரும் ஜுன் 20ஆம் நாள் கான்சூ மாநிலத்தின் லின் சியா ஹுய் இனத் தன்னாட்சி சோவில் துவங்க உள்ளது.

ஜுன் 20 முதல் ஜுலை 20ஆம் நாள் வரை நடைபெறும் நடப்பு சுற்றுலா விழாவின் விருந்தினர் நாடு கம்போடியா. உலக சுற்றுலா அமைப்பும், ஆசிய-பசிபிக் சுற்றுலா சங்கமும் அதற்கு ஆதரவளிக்கும் அமைப்புகளாகும். பட்டுப்பாதை சுற்றுலாவுக்கான பரப்புரை, மஞ்சள் ஆற்றின் இரவுக் காட்சி, பட்டுப்பாதை சர்வதேச சுற்றுலா வணிகர் மாநாடு முதலியவை இவ்விழாவின் அம்சங்களில் அடங்கும்.

மேலும், இவ்விழாவின் போது, கான்சூ மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தனிச்சிறப்புமிக்க சுற்றுலா நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.(வான்மதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040