• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்க-ஐரோப்பிய கருத்து வேற்றுமை பற்றிய மெர்கலின் கருத்து
  2017-05-29 16:07:29  cri எழுத்தின் அளவு:  A A A   
அமெரக்காவுடன் கொள்கையில் கருத்து வேற்றுமை, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது முதலிய நெருக்கடிகளை கூட்டாக சமாளிக்குமாறு, ஐரோப்பிய ஒன்றியத்தின் பல்வேறு உறுப்பு நாடுகளுக்கு ஜெர்மனி தலைமையமைச்சர் மெர்கல் அம்மையார் 28ஆம் நாள் வேண்டுகோள் விடுத்தார்.

ஜெர்மனியின் பேயர்ன் மாநிலத்தில் அவர் பேசுகையில், அண்மையில் நிறைவடைந்துள்ள 7 நாடுகள் குழு உச்சி மாநாட்டில், காலநிலை தொடர்பான ஒரு முக்கிய உடன்படிக்கைக்கு அமெரிக்க அரசுத் தலைவர் டிராம்ப் ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதால், காலநிலை மாற்றம் பிரச்சினை பற்றி 7 நாடுகளின் தலைவர்கள் ஒத்த கருத்து வர முடியவில்லை என்று தெரிவித்தார்.

பிரட்டன் மற்றும் அமெரிக்காவுடன் நட்பார்ந்த உறவையும் ரஷியா உள்ளிட்ட பிற நாடுகளுடனான சுமுகமான நட்புறவையும் தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால், ஐரோப்பியவர்களாகிய நாம், நமது தலைவிதிக்கு பாடுபட வேண்டும் என்று மெர்கல் சுட்டிக்காட்டினார்.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040