• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-பிரான்சு வெளியுறவு அமைச்சர்கள் உரையாடல்
  2017-05-30 12:22:08  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ 29ஆம் நாள் பிரான்சின் புதிய வெளியுறவு அமைச்சர் ஜீன் இவெஸ் லே டுரியனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

புதிதாகப் பதவியேற்ற லே டுரியனுக்கு வாங்யீ வாழ்த்து தெரிவித்தார். இதனிடையே, இருநாட்டு அரசுத் தலைவர்கள் சமீபத்தில் உருவாக்கிய முக்கிய ஒத்த கருத்துக்களை இருதரப்பும் உணர்வுப்பூர்வமாக நடைமுறைப்படுத்தி, சீன-பிரான்சு பன்முக நெடுநோக்கு கூட்டுறவின் விரைவான வளர்ச்சியை நிலைநிறுத்த வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

லே டுரியன் கூறுகையில், இருநாட்டு நெடுநோக்கு ஒத்துழைப்பு பயன்மிக்கது. இருதரப்பின் பொது நலன்களும் விவாதத் தலைப்புகளும் அதிகரித்துள்ளன என்று தெரிவித்தார்.
காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் பாரிஸ் உடன்படிக்கையின் நடைமுறையாக்கம், கொரிய தீபகற்பத்தின் நிலைமை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.(வான்மதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040