• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலக பொருளாதார மன்றம்:ஈரானில் பயணம் செலவு குறைந்தது
  2017-05-30 14:06:46  cri எழுத்தின் அளவு:  A A A   
உலக பொருளாதார மன்றம் மே திங்கள் வெளியிட்ட அறிக்கையில், உலகில் பயணச் செலவு குறைவாகும் நாடுகளில் ஈரானும் ஒன்றாகும். வெளிநாட்டுப் பயணிகளைப் பொறுத்த வரை, அது, மிக பாதுகாப்பான சுற்றுலா இடங்களில் ஒன்று என்று ஈரான் செய்தி நிறுவனம் 29ஆம் நாள் கூறியது.

உலக பொருளாதார மன்றம், உலகில் சுற்றுலா இடங்கள் பற்றி ஆய்வு செய்துள்ளது. சுற்றுலாச் செலவு, அடிப்படை வசதிகள், பொதுச் சேவை, போக்குவரத்து, பாதுகாப்பு முதலியவற்றின் அடிப்படையில், பல்வேறு நாடுகளுக்கு மதிப்பெண்களை வழங்கி, ஒரு தரவரிசையை வெளியிட்டுள்ளது.

ஈரானில் வெளிநாட்டுப் பயணிகள் ஒரு நாளுக்கான செலவு 25 முதல் 600 அமெரிக்க டாலர் வரை இருக்கும். 136 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஈரான் முதலிடம் வகிக்கிறது. தொடர்ந்து 3 ஆண்டுகளாக இத்தகுநிலை ஈரான் பெற்றுள்ளது. பாதுகாப்புத் துறையில், ரஷியா, துருக்கி, தாய்லாந்து முதலிய நாடுகளுக்கு முன்னால் உள்ளது என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040