• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மத்திய ஆசியா அறிக்கை
  2017-06-06 17:50:56  cri எழுத்தின் அளவு:  A A A   

மத்திய ஆசியா மஞ்சள் அறிக்கையையும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மஞ்சள் அறிக்கையையும், சீனாவின் சிந்தனைச் சங்கங்களில் ஒன்றான சீனச் சமூக அறிவியல் கழகம் ஜுன் 6ஆம் நாள் வெளியிட்டது. கடந்த காலங்களில், மத்திய ஆசியாவிலுள்ள நாடுகளின் நிலைமைகள், எதிர்கால வளர்ச்சிப் போக்கு ஆகியவை இவ்வறிக்கைகளில் முக்கியமாகக் கவனம் செலுத்தப்பட்டவை.

2016ஆம் ஆண்டு, மத்திய ஆசிய நாடுகள் சுதந்திரம் பெற்றதன் 25ஆவது ஆண்டு நிறைவாகும். தற்போது, மத்திய ஆசிய நாடுகளின் அரசியல், பொருளாதாரம், தூதாண்மை, பாதுகாப்பு ஆகிய துறைகளில் மிகவும் பெரிய வேறுபாடுகள் காணப்பட்டுள்ளன. ஆனால், ஒட்டுமொத்த நிலையில், இங்கு சீராக வளர்ந்து வரும் போக்கில் மாற்றம் ஏற்படவில்லை.

பொருளாதாரத் துறையில், மத்திய ஆசிய நாடுகளின் பொருளாதாரக் கட்டமைப்புப் பிரச்சினைக்கு பயனுள்ள தீர்வு இன்னும் காணப்படவில்லை. பாதுகாப்புத் துறையில், சில பயங்கரவாத வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. பயங்கரவாதமும் தீவிரவாதமும் மத்திய ஆசியாவில் ஏற்படுத்தி வரும் தாக்கம் உயர்ந்து வருகிறது. இருப்பினும், இங்குள்ள பாதுகாப்பு நிலை கட்டுப்பாட்டுக்குள் இருப்பது என்ற அடிப்படை நிலை மாறவில்லை என்று மத்திய ஆசியா மஞ்சள் அறிக்கையையில் குறிப்பிட்டுள்ளவை.

மேலும், சீனாவுக்கும் மத்திய ஆசியாவுக்கும் இடையேயான உறவு குறித்த கவனம், இந்த மஞ்சள் அறிக்கையில் முக்கிய பகுதியாகும். சீனாவுக்கும் மத்திய ஆசிய நாடுகளுக்கும் இடையே தூதாண்மை உறவு நிறுவப்பட்டு 25 ஆண்டுக்காலம் ஆகி விட்டது. அதில், நல்ல அண்டை வீட்டார், நல்ல கூட்டாளி, நல்ல நண்பர் என்ற நிலையில் இருந்து நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டுறவாக, சீனாவும் மத்திய ஆசியாவின் ஐந்து நாடுகளும் வளர்ந்துள்ளன. பிரதேசம் மற்றும் சர்வதேச அரங்கில், இரு தரப்பு ஒத்துழைப்பு அளவு இடைவிடாமல் அதிகரித்து வருகிறது என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.

மத்திய ஆசியாவுக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இத்துடன், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மஞ்சள் அறிக்கையும் வெளியிடப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்த பிறகு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மேம்படுவதற்கு நிபந்தனை உருவாகும் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டது.

இது பற்றி சீனச் சர்வதேச விவகார ஆய்வு நிறுவனத்தின் ஐரோப்பிய-ஆசிய ஆய்வுப் பிரிவின் துணைத் தலைவர் லீ ஜிகோவ் பேசுகையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நிறுவப்பட்டது முதல் இது வரை பல பிரதேசப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பிரதேச பாதுகாப்புத் துறையில் ஏற்பட்ட மாற்றத்துக்கு ஏற்ப, இவ்வமைப்பு மேலும் மேம்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040