உலகிலேயே முதல் முறையாக தண்டவாளம் இல்லாத புதிய ரக தொடர்வண்டியை சீனா வடிவமைத்து தயாரித்துள்ளது. சீனாவின் ஹுனான் மாநிலத்தில் உள்ள சூ சோ நகரில் இந்த புதிய தொடர்வண்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சாலையில் வாகனம் போன்று இந்த தொடர்வண்டி இயங்கும். ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 307 பேர் பயணிக்கலாம், மணிக்கு 70 கி.மீ வேகத்தில் ஓடக் கூடியது. இது இயங்கும் போது தனியாக தண்டவாளங்கள் இதற்கு கிடையாது.