• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-கசகஸ்தான் பட்டுப்பாதை அரங்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன
  2017-06-07 09:32:36  cri எழுத்தின் அளவு:  A A A   
கசகஸ்தானில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் செயற்குழுவின் 17ஆவது கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் விரைவில் கலந்து கொள்ள உள்ளார். இதற்கு முன்பு, சீன தேசிய செய்தி, வெளியீடு, வானொலி, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தலைமைப் பணியகம், சீன வானொலி நிலையம், கசகஸ்தானின் தொடர்புடைய நிறுவனங்கள் ஆகியவை கூட்டாக நடத்திய பண்பாட்டு நிகழ்ச்சிகள், அஸ்தானாவில் நடைபெற்றன.

6ஆம் நாள் பிற்பகல், சீன தேசிய செய்தி, வெளியீடு, வானொலி, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தலைமைப் பணியகம், கசகஸ்தானின் தொலைக்காட்சி நிலையத்துடன் இணைந்து நடத்திய பட்டுப்பாதை அரங்கு எனும் நிகழ்ச்சியின் துவக்க விழா, இந்நகரில் நடைபெற்றது.

அதே நாள், சீன வானொலி நிலையமும், கசகஸ்தானின் 2 செய்தி ஊடகங்களும் கூட்டாக வெளியிட்ட சீன பாணி--கசகஸ்தான் சிறப்புப் பதிப்பின் வெளியீட்டு விழாவும் இந்நகரில் நடைபெற்றுள்ளது.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040