• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜூலை 17இல் இந்திய அரசுத் தலைவர் தேர்தல்
  2017-06-08 16:05:07  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்திய அரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய தேர்தல் ஆணையம் புதன்கிழமை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி கூறுகையில், இத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 17ஆம் தேதியன்றும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 20ஆம் தேதியன்றும் நடைபெறும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அந்தந்த மாநிலங்களின் தலைநகரங்களிலும் வாக்குப் பதிவு செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

தற்போது அரசுத் தலைவராக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம், ஜூலை 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இம்முறை அரசுத் தலைவர் தேர்தலில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
• பெய்ஜிங் மாநகரில் நிலக்கரி பயன்பாடு குறைவு
• குஜராத் வெள்ளம்:100க்கு அதிகமானோர் சாவு
• பாதுகாப்பு விவகாரம் தொடர்பான ஐரோப்பிய ஆணைய அறிக்கை
• அயர்லாந்தில் திபெத் பிரிதநிதிக்குழுவின் பயணம்
• சிரியாவில் மோதல் குறைப்பு பிரதேசத்தில் அனுப்பப்பட்ட முதலாவது மீட்புப் பொருட்கள்
• ரஷியா, ஈரான், வட கொரியா மீது அமெரிக்காவின் புதிய தடை நடவடிக்கை
• சீனாவில் செவ்வாய் கிரக கிராமத் திட்டம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040