• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை – இந்திய ரிசர்வ் வங்கி
  2017-06-08 16:07:11  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கி, பிற வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி எனப்படும் ரெபோ ரேட்டில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை. இது 6.25 சதவீதம் என்ற நிலையிலேயே நிறுத்தப்பட்டது. இந்த அறிவிப்பு புதன்கிழமை வெளியிடப்பட்டது.

அதேபோல், ரிவர்ஸ் ரெபோ ரேட் எனப்படும் பிற வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டி விகிதத்திலும் மாற்றம் கொண்டு வரப்படாமல், 6 சதவீதம் என்ற அளவிலேயே நிறுத்தப்பட்டது.

நிதிக் கொள்கைக் கமிட்டியின் இந்த முடிவு, நிதிக் கொள்கையின் நடுநிலை நிலைப்பாட்டுடன் மாறாதவை என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040