• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கசகஸ்தானில் ஷிச்சின்பிங்-நரேந்திர மோடி சந்திப்பு
  2017-06-09 19:06:48  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும், இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடியும் 9ஆம் நாள் வெள்ளிக்கிழமை கசகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் சந்தித்துப் பேசினர்.

சந்திப்பின்போது, ஷிச்சின்பிங் கூறுகையில், தற்போது, சர்வதேச சூழ்நிலையில் ஆழ்ந்த சிக்கலான மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய வளரும் நாடுகளாக திகழும் சீனாவும் இந்தியாவும், ஒத்துழைப்புகளில் மேலதிக கவனம் செலுத்தி, இணைந்து முன்னேறிச் செல்ல வேண்டும். தத்தமது நாட்டின் வளர்ச்சிக்கு உதவி அளித்து, உலகின் அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணிக்காத்து, கூட்டாக வளர்வதை முன்னெடுப்பதற்கு பங்காற்ற வேண்டும். இந்தியாவுடனான உறவுக்கு சீனா மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்தியாவுடன் இணைந்து, சீன-இந்திய நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டுறவு தொடர்ச்சியாகவும் சீராகவும் வளர்வதை ஊக்குவிக்க சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.

மேலும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா அதிகார்ப்பூர்வ உறுப்பு நாடாக இணைய உள்ளதற்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இந்தியாவுடன் சேர்ந்து இந்த அமைப்பின் கட்டுக்கோப்புக்குள்ளான ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா விரும்புவதாகவும், ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

போடி கூறுகையில், சர்வதேச அளவில் சிக்கல்களும் மாற்றங்களும் ஏற்பட்டுள்ள பின்னணியில், சீரான இந்திய-இந்திய உறவு, நிலைத்தன்மை வாய்ந்த பங்களிப்பை வெளிக்காட்டுகிறது. இரு தரப்பும், நல்வாய்புகளைத் தேடி, சர்வதேச விவகாரங்களில் தொடர்பை வலுப்படுத்தி, உரிய முறையில் கருத்துவேற்றுமைக் கையாள வேண்டும் என்று தெரிவித்தார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா இணைவதக்கு சீனா அளித்து வரும் ஆதரவுக்கு மோடி நன்றி தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• டோக்லமில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் – இந்திய நிபுணர்
• எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல் – இந்திய தூதருக்கு பாகிஸ்தான் அழைப்பு
• இந்தியாவில் ஹெச்1என்1 வைரஸ் பரவல் 600 பேர் உயிரிழப்பு
• இந்தியத் தரப்பிடம் சீனாவின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த வாகனக் குண்டு வெடிப்பு
• சீனப் பொருளாதார அதிகரிப்பு பற்றி உலக நாணய நிதியத்தின் மதிப்பீடு
• ஈராக் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவில் சுற்றுப்பயணம்
• எல்லா வகையிலும் இறையாண்மையைப் பாதுகாக்கும்:சீன ராணுவம்
• ஜோர்டானிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தில் துப்பாக்கி சம்பவம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040