• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வறுமை ஒழிப்பு மற்றும் மனித உரிமை பாதுகாப்புக்கான வேண்டுகோள்
  2017-06-14 15:41:34  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜுன் 13ஆம் நாளன்று ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் 35ஆவது கூட்டத் தொடரில், ஐ.நா.வுக்கான சீனத் தூதர் மா சாவ்சுயெ, 140க்கும் அதிகமான நாடுகளின் சார்பில் உரையாற்றினார். இதில், வறுமை ஒழிப்புக்காக இணைந்து முயற்சித்து, மனித உரிமையை மேம்படுத்திப் பேணிக்காப்பது என்ற தலைப்பில் கூட்டறிக்கையை அவர் வெளியிட்டார். இந்தக் கூட்டறிக்கையை வெளியிட்ட 140க்கும் அதிகமான நாடுகளில், வளர்ந்த நாடுகளை தவிரவும், பல வளரும் நாடுகளும் இடம்பிடித்துள்ளவை.

மா சாவ்சுயெ உரையாற்றிய போது, தற்போது உலகில் 80 கோடிக்கும் மேற்பட்டோர் இன்னும் வறிய நிலையில் வாழ்ந்து வருகின்றனர். வறுமை ஒழிப்பு என்பது, மனித உரிமையைப் பேணிக்காக்கும் முக்கிய வழியாகும் என்று குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது

வறுமையை எவ்வாறு குறைத்து அதனை ஒழிப்பது, மனித உரிமையை மேம்படுத்துவதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்குவது ஆகியவை, சர்வதேச சமூகம் கூட்டாக எதிர்கொள்ளும் பொது அறைகூவல் ஆகும். இதற்கு, பல்வேறு நாடுகள் கூட்டாக முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த அறைகூவல்களை சமாளிக்கும் வகையில், கூட்டறிக்கையில் 4 முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தொடரவல்ல வளர்ச்சியை வரைவுபடுத்துவது, பன்முகமான கொள்கையை மேற்கொண்டு, வறுமை நிவாரணம் மற்றும் ஒழிப்புப் பணிகளை துல்லியமான முறையில் நடைமுறைப்படுத்துவது, சமூக நீதி மற்றும் நியாயத்தைக் கடைப்பிடிப்பது, வறுமை குறைப்புக்கான சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவது ஆகியவை இந்த முன்மொழிவுகல் ஆகும்.

மேலும், உலகின் வறுமை குறைப்புப் பணியை நிறைவேற்றுவதற்கு நீண்டகால முயற்சி தேவை. முற்றிலும் வறுமையை ஒழிக்கும் இலக்கை கூடிய விரைவில் நனவாக்கும் வகையில் சர்வதேச சமூகம் ஒத்துழைக்க வேண்டும் என்றும் மா சாவ்சுய் குறிப்பிட்டார். வறுமை இல்லாத மற்றும் தொடரவல்ல வளர்ச்சியான பொதுச் சமூகத்தை அமைக்க நாம் இடைவிடாமல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

பல ஆண்டுக்கால முயற்சிகளுக்குப் பிறகு, சீனாவில் 70 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டனர். இந்த சாதனை, உலகின் மனித உரிமைப் பணிக்கு முக்கிய பங்களிப்பாகும். பிற வளரும் நாடுகளுக்கு வறுமைக் குறைப்பு குறித்த அனுபவங்களையும் நடவடிக்கைகளையும் சீனா ஆவலுடன் பகிர்ந்து கொள்ளும் என்று மா சாவ்சுயெ கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• இந்தியத் தரப்பிடம் சீனாவின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த வாகனக் குண்டு வெடிப்பு
• சீனப் பொருளாதார அதிகரிப்பு பற்றி உலக நாணய நிதியத்தின் மதிப்பீடு
• ஈராக் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவில் சுற்றுப்பயணம்
• எல்லா வகையிலும் இறையாண்மையைப் பாதுகாக்கும்:சீன ராணுவம்
• ஜோர்டானிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தில் துப்பாக்கி சம்பவம்
• பாலஸ்தீன-இஸ்ரேல் நிலைமை பற்றி அரபு நாடுகள் லீக்கின் கூட்டம்
• அமெரிக்க கோரிக்கைக்கு ஈரான் மறுப்பு
• உத்தரப் பிரதேசத்தில் நஞ்சு கல்ந்து தேநீர் - 21 பேருக்கு உடல்பாதிப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040