• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ரென்மின்பி கையிருப்பை அதிகரித்துள்ள ஐரோப்பிய மத்திய வங்கி
  2017-06-15 11:31:20  cri எழுத்தின் அளவு:  A A A   

இவ்வாண்டின் முதல் 6 திங்களில், 50 கோடி யூரோ மதிப்புக்குச் சமமாகும் ரென்மின்பி அந்நியச் செலாவணி இருப்பை அதிகரித்துள்ளதாக, ஐரோப்பிய மத்திய வங்கி 13ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் சீன நாணயமான ரென்மின்பி, சர்வதேச நாணமாகப் பயன்படுத்தப்பட்ட அளவு அதிகரித்து வந்துள்ளது. 2016ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி முதல், சர்வதேச நாணய நிதியத்தின் எஸ்.டி.ஆர் எனும் சிறப்பு எடுப்பு உரிமை முறையில் இணைந்துள்ளது. அமெரிக்க டாலர், யூரோ, ஜப்பான் யென், பிரிட்டன் புவண்டு ஆகிய நாணயங்களை அடுத்து, இந்த முறையில் சேர்க்கப்பட்ட 5வது நாணமாக ரென்மின்பி மாறியுள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டது.

ஐரோப்பிய மத்திய வங்கி ரென்மின்பி கையிருப்பை அதிகரிப்பது, யூரோ நாணயப் பகுதிக்கு முக்கிய பெரிய வர்த்தகக் கூட்டாளிகளில் ஒன்றான சீனாவின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது என்றும் அதில் குறிப்பிடப்பட்டது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040