• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-அமெரிக்க தூதாண்மை பாதுகாப்பு பேச்சுவார்த்தை
  2017-06-17 16:34:32  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன-அமெரிக்க அரசுத் தலைவர்கள் எட்டியுள்ள ஒத்த கருத்துக்கிணங்க, முதலாவது சீன-அமெரிக்க தூதாண்மை பாதுகாப்பு பேச்சுவார்த்தை வரும் 21ஆம் நாள் வாஷிங்டனில் நடைபெற உள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லு காங் 16ஆம் நாள் தெரிவித்துள்ளார். சீன அரசவை உறுப்பினர் யாங் ஜியேட்சூ, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரேக்ஸ் டில்லர்சன், பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மாட்டிஸ் ஆகியோர் இப்பேச்சுவார்த்தைக்குக் கூட்டாகத் தலைமை தாங்குவர். அப்போது, சீன-அமெரிக்க உறவு, பொது அக்கறை உள்ள முக்கிய பிரச்சினைகள் ஆகியவை குறித்து இருதரப்பும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள உள்ளது.(வான்மதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040