கியூபா மீது பொருளாதாரம், சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் ஒபாமா அரசு மேற்கொண்ட கொள்கையை அமெரிக்கா இறுக்கமாக்கும். ஆனால் கியூபாவிலுள்ள அமெரிக்க தூதரகத்தை மூடப் போவதில்லை என்று அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் 16ஆம் நாள் அறிவித்தார்.
ஃபுலோரிடா மாநிலத்தில் அவர் உரை நிகழ்த்திய போது, ஒபாமா அரசு கியூபாவுடன் உருவாக்கிய சமனற்ற உடன்படிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், அமெரிக்க தொழில் நிறுவனங்கள் கியூபா இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தொழில் நிறுவனங்களுடன் வியாபாரம் செய்ய தடை விதிக்கும் அதேவேளை, கியூபாவில் சுற்றுலா செய்ய அமெரிக்கர்களுக்கான கட்டுப்பாட்டையும் வலுப்படுத்துவோம் என்றும் தெரிவித்தார்.
உரைக்குப் பிறகு, கியூபா மீதான புதிய கொள்கை தொடர்பான கட்டளையில் டிரம்ப் கையொப்பமிட்டார். அமெரிக்க நிதி அமைச்சகமும் வணிக அமைச்சகமும் 30 நாட்களுக்குள் இக்கொள்கையை வெளியிடும் நடைமுறையைத் தொடங்கும்.(வான்மதி)