• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அடிப்படை வசதிகளின் வளர்ச்சிக்கு AIIB புதிய ஆற்றலை வழங்கும்
  2017-06-18 15:50:35  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியின் 2ஆவது செயற்குழுவின் ஆண்டு கூட்டம் 16, 17 ஆகிய நாட்களில் தென் கொரியாவின் ஜெஜு தீவில் நடைபெற்றது. இவ்வங்கியின் சீன உறுப்பினரான சீன நிதி அமைச்சர் சியாவ்ஜியே இக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய போது, அடிப்படை வசதிகளின் தொடரவல்ல வளர்ச்சியையும் பரஸ்பர பிணைப்பையும் முன்னேற்றுவதற்கு ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கி புதிய ஆற்றலைக் கொண்டு வரும் என்று தெரிவித்தார்.

மேலும், இவ்வங்கியின் கட்டுமானம் மற்றும் நிர்வாகத்தில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், தலைமை அமைச்சர் லீகெச்சியாங் ஆகியோர் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர். பல்வேறு உறுப்பு நாடுகளும் இவ்வங்கியின் எதிர்கால வளர்ச்சி மீது எதிர்பார்ப்பை காட்டியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

நடப்புக் கூட்டத்தில், தாங்கா, அர்ஜென்டீனா, மடாகாஸ்கர் ஆகிய நாடுகள் இவ்வங்கியில் சேர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய உறுப்பினர் 3ஆவது செயற்குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.(வான்மதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040