• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆப்கானிஸ்தான் காவல் நிலையம் மீது தலிபான் தாக்குதல்
  2017-06-18 16:43:56  cri எழுத்தின் அளவு:  A A A   
கிழக்கு ஆப்கானிஸ்தானின் பாக்டியா மாநிலத்திலுள்ள காவல் நிலையம் 18ஆம் நாள் தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதலுக்குள்ளானது. இதில் மூன்று காவல்துறையினர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர் என்று அந்நாட்டின் உள்துறை அதிகாரி ஒருவர் அன்று தெரிவித்தார்.

இத்தாக்குதல் உள்ளூர் நேரப்படி காலை 6:15 மணியளவில் நிகழ்ந்தது. இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக தலிபான் இயக்கம் அறிவித்தது. தாக்குதலைத் தொடர்ந்து இரு தரப்புக்குமிடையேயான சண்டை இன்னும் நீடித்துள்ளதாகத் தெரிகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040