• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பான பேச்சுவார்த்தை துவக்கம்
  2017-06-20 10:43:00  cri எழுத்தின் அளவு:  A A A   

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பான பேச்சுவார்த்தை ஜுன் 19-ஆம் நாளில் அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும் பிரிட்டனும் நியாயமான உடன்படிக்கை ஒன்றை உருவாக்கும் வாய்ப்பு உள்ளதாக இப்பேச்சுவார்த்தைக்குப் பொறுப்பேற்றுள்ள ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் முதன்மை பிரதிநிதி மிஷெல் பார்னியர் தெரிவித்தார்.

19-ஆம் நாள் பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் மிஷெல் பார்னியர் கூறுகையில், பேச்சுவார்த்தையின் நிகழ்ச்சி நிரல், நிறுவனத்தின் அமைப்பு, பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்கள் ஆகியவை குறித்து இரு தரப்பும் ஒத்த கருத்துக்களுக்கு வந்துள்ளன என்றார். மேலும், பேச்சுவார்த்தையின் முதலாவது கட்டத்தில், உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும் இரண்டாவது கட்டத்தில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டனின் எதிர்கால உறவு பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டார்.

தவிர, பிரிட்டனின் பிரதிநிதி டேவிஸ் செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், 19-ஆம் நாள் நடைபெற்ற பேச்சுவார்த்தை மிகவும் பயன் மிக்கது என்றார். நடப்பு வாரத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சி மாநாட்டில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பான பிரிட்டனின் புதிய திட்டத்தை தலைமையமைச்சர் தெரசா மே அம்மையார் பல்வேறு நாடுகளின் தலைவர்களிடம் எடுத்து கூறவுள்ளதாக டேவிஸ் தெரிவித்தார்.(தேன்மொழி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040