• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-அமெரிக்க தூதாண்மைப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தை பற்றிய சீனாவின் கருத்து
  2017-06-20 18:04:59  cri எழுத்தின் அளவு:  A A A   
முதல் சுற்று சீன-அமெரிக்க தூதாண்மைப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தை 21ஆம் நாள் வாஷிங்டனில் நடைபெறவுள்ளது. கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை, தென் சீன கடல், பயங்கரவாத எதிர்ப்பு முதலிய பிரச்சினைகள் பற்றி முக்கியமாக விவாதிப்பது தொடர்பான அமெரிக்காவின் மனப்பான்மை குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கேங்ஷுவாங் 20ஆம் நாள் கூறுகையில், இரு தரப்புறவு பற்றியும் பொது அக்கறை கொண்ட பிரதேச மற்றும் சர்வதேச பிரச்சினைகள் பற்றியும் இரு தரப்பும் விவாதிக்கவுள்ளன என்று கூறினார். அமெரிக்காவுடன் இணைந்து, நடத்த உள்ள இப்பேச்சுவார்த்தை பயனுள்ள சாதனைகளைப் பெறுவதை முன்னேற்ற சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.(ஜெயா)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040