• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தின் கடலில் ஒத்துழைப்புக்கான யோசனையை சீனா வெளியிட்டது
  2017-06-21 18:40:53  cri எழுத்தின் அளவு:  A A A   
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் கட்டுமானத்தின் கடல் ஒத்துழைப்புக்கான யோசனையை சீன தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையமும், சீன தேசிய கடல் பணியகமும் அண்மையில் வெளியிட்டது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தின் கடல் ஒத்துழைப்பை முன்னேற்றுவது குறித்து சீனா முன்வைத்த முதல் திட்டம் இதுவாகும்.

நெடுகிலுள்ள நாடுகளுடனான நெடுநோக்கு வாய்ந்த இணைப்பையும் கூட்டுச் செயல்களையும் மேலும் வலுப்படுத்தி, பன்முகமான, பல அடுக்கில், விரிவான துறைகளில் நீல வண்ண கூட்டாளியுறவின் உருவாக்குகத்தை முன்னேற்றி, 21ஆவது நூற்றாண்டு கடல் பட்டுப்பாதையைக் கூட்டாக உருவாக்கி வளப்படுத்தும் வகையில், இந்த யோசனை வகுக்கப்பட்டுள்ளது. நீல வண்ண 3 பொருளாதார பாதைகள் முக்கியமாக கட்டியமைக்கப்பட வேண்டும். இவற்றில் ஒன்று, சீன கடலோர பகுதி பொருளாதார மண்டலத்தை ஆதரவாகக் கொண்டு, சீன-பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச-சீன-இந்திய-மின்மார் பொருளாதாரப் பாதைகளை இணைக்கும் சீன-இந்து மாக்கடல்-ஆப்பிரிக்க-மத்திய தரைக் கடல் நீல வண்ண பொருளாதாரப் பாதையாகும். இரண்டு, சீன-ஓஷானிய-தென் பசிபிக் கடல் நீல வண்ண பொருளாதாரப் பாதையாகும் என்று இந்த யோசனையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

நீல வண்ண மண்டலத்தைப் பகிர்ந்து கொண்டு, நீல வண்ண பொருளாதாரத்தை வளர்ப்பதை முக்கியமாகக் கொள்ள வேண்டும். கடல் உயிரின வாழ்க்கைச் சூழலைப் பாதுகாத்து, கடலில் பரஸ்பர நலன் தருவதை நனவாக்குவதுடன், கடல் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றி, கடல் பாதுகாப்பைப் பேணிக்காத்து, கடல் நிர்வாகத்தில் கூட்டாக கலந்து கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பசுமை வளர்ச்சி, கடலோர செழுமை, பாதுகாப்பு மற்றும் உத்தரவாதம், அறிவார்ந்த புத்தாக்கம், ஒத்துழைப்புடன் கூடிய நிர்வாகம் முதலிய பாதைகளில் கூட்டாக நடைபோட வேண்டும். இதன் விளைவாக, மனிதரும் கடலும் இணக்கமாக இருப்பதுடன், கூட்டு வளர்ச்சியும் நனவாக்கப்படும் என்று சீன அரசு முன்மொழிவை வழங்கியுள்ளது.

21ஆவது நூற்றாண்டு கடல்வழி பட்டுப்பாதை நெடுகிலுள்ள பல்வேறு நாடுகளுடன் இணைந்து, பன்முக, பல துறைகளிலான கடல் ஒத்துழைப்பை மேற்கொண்டு, திறப்பான, அனைத்தையும் உள்ளடக்கிய தன்மை வாய்ந்த ஒத்துழைப்பு மேடையைக் கூட்டாக உருவாக்கி, ஆக்கப்பூர்வமான பயனுள்ள நீல வண்ணக் கூட்டுயுறவை நிறுவ சீனா விரும்புவதாக சீன தேசியக் கடல் பணியகத்தின் பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040