• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காயில் நடைபெறும் பிரிக்ஸ் நாட்டு வணிக அமைச்சர்கள் கூட்டம்
  2017-06-22 17:02:46  cri எழுத்தின் அளவு:  A A A   
சியாமென் நகரில் நடைபெறும் பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் 9ஆவது பேச்சுவார்த்தைக்கு பொருளாதார மற்றும் வர்த்தகச் சாதனையை முன்னேற்பாடு செய்யும் வகையில், பிரிக்ஸ் நாடுகளின் 7ஆவது வணிக அமைச்சர்கள் கூட்டத்தை சீன வணிக அமைச்சகம் ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் ஷாங்காய் மாநகரில் நடத்தும் என்று இவ்வமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சுன் ஜிவென் 22ஆம் நாள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தின் மூலம், வர்த்தக வசதிமயமாக்கம், சேவை வர்த்தகம், மின்னணு வணிக அலுவல் உள்ளிட்ட துறைகளிலான ஒத்துழைப்பு குறித்து பல்வேறு தரப்புகளுடன் உடன்பாட்டுக்கு வர வேண்டும் என்றும், பிரிக்ஸ் நாட்டு வர்த்தக ஒத்துழைப்பின் முறைமை மயமாக்கம் மற்றும் நடைமுறையாக்கத்துக்கு புதிய ஆற்றலைக் கூட்டாக வழங்க வேண்டும் என்றும் சீனா விரும்புவதாக அவர் கூறினார்.(வான்மதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040