• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜோர்டானின் மன்னர் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு
  2017-06-23 09:34:50  cri எழுத்தின் அளவு:  A A A   
ஜுன் 22ஆம் நாள், ஜோர்டானின் மன்னர் இரண்டாவது அப்துல்லா, அந்நாட்டின் தலைநகர் அம்மானில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு வருகின்ற சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயைச் சந்தித்துப்பேசினார்.
ஒரே சீனா என்ற கோட்பாட்டை ஜோர்டான் உறுதியாக ஆதரிக்கிறது. சீனாவுடன் இணைந்து, அரசியல் துறையில் பரஸ்பர நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி, பயனுள்ள ஒத்துழைப்பை ஆழமாக்க ஜோர்டான் விரும்புகின்றது. பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், முதலீடு, அடிப்படை வசதி முதலிய துறைகளிலான ஒத்துழைப்பை முன்னேற்றி, பிரதேச அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிகாப்பதற்குப் பங்காற்ற வேண்டும் என விரும்புவதாக இரண்டாவது அப்துல்லா கூறினார்.
நிதானத்தை நிலைநிறுத்தி, சீர்திருத்தம் மூலம் வளர்ச்சியைப் விரைவுபடுத்தும் வகையில், ஜோர்டான் மேற்கொண்டுள்ள முயற்சிகளைச் சீனா உறுதியாக ஆதரிக்கும் என்று வாங் யீ கூறினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040