• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஏர் இந்திய விமான நிறுவனத்தை விற்க இந்திய அமைச்சரவை ஒப்புதல்
  2017-06-29 19:26:36  cri எழுத்தின் அளவு:  A A A   
கடனில் சிக்கித் தவித்து வரும் ஏர் இந்திய விமான நிறுவனத்தை விற்பதற்கு இந்திய அமைச்சரவை புதன்கிழமை கொள்கை அடிப்படையில் ஒப்புதல் அளித்துள்ளதாக நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

அரசின் இம்முடிவை எப்படி நடைமுறைப்படுத்துவது என அறிவதற்காக ஒரு குழு நியமிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடனில் உள்ள ஏர் இந்திய நிறுவனத்துக்கு அரசு தொடர்ந்து நிதி அளிக்க முடியாது என்று இந்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அஷோக் கஜபதி ராஜு கடந்த மாதம் உணர்த்தினார்.

அரசின் சிந்தனைக் கிடங்கான நிதி அயோக், விமான நிறுவனத்தின் 50 சதவீதக் கடன்களை தள்ளுபடி செய்துவிட்டு, தனியாருக்கு விற்குமாறு பரிந்துரைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏர் இந்தியா நிறுவனம், 1932ஆம் ஆண்டில் டாடா குழுமத்தால் தொடங்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்தபின், 1948இல் இந்திய அரசுடன் இணைந்து செயல்பட்டது. 5 ஆண்டுகளுக்குப் பின்னர், முழுமையாக அரசுடமையாக்கப்பட்டது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிக்குழுத் தலைவர்களுடன் ஷீ ச்சின்பிங்கின் சந்திப்பு
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை பற்றிய கருத்துரு அமெரிக்க செனெட் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
• அக்சா மசூதியில் மோதல்
• பிரிக்ஸ்நாடுகளின் பாதுகாப்பு அலுவல் பற்றிய உயர் நிலை பிரதிநிதி கூட்டம்
• பிரிக்ஸ் நாடுகளின் செய்தித் தொடர்பு அமைச்சர்கள் கூட்டம்
• வரித் துறை ஒத்துழைப்பு பற்றி பிரிக்ஸ் நாடுகளின் முதலாவது குறிப்பாணை
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040