• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாரம்பரிய மருத்துவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் பிரிக்ஸ் நாடுகள்
  2017-07-07 13:31:41  cri எழுத்தின் அளவு:  A A A   

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் உள்ளடங்கிய பிரிக்ஸ் அமைப்பின் சுகாதார அமைச்சர்கள் மாநாடும், பாரம்பரிய மருத்துவம் குறித்த உயர்நிலை கூட்டமும் 6ஆம் நாள் வியாழக்கிழமை சீனாவின் தியன்ஜின் மாநகரில் நடைபெற்றது. தியன்ஜின் அறிக்கை, பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே பாரம்பரிய மருத்துவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் கூட்டறிக்கை ஆகியவை அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன.

இம்மாநாட்டில் கலந்து கொண்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜகட் பிரகாஷ் நட்டா பேசுகையில், சுகாதார மற்றும் பாரம்பரிய மருத்துவ துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது, பிரிக்ஸ் நாடுகளின் மக்களிடையே புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையை அதிகரிக்க உதவும் என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

பிரிக்ஸ் நாடுகளில் பாரம்பரிய மருத்துவ வளங்கள் நிறைந்து காணப்படுகின்றன. சுகாதார உலகத்தை உருவாக்குவதில் நாம் மேலும் முக்கிய பங்கினை ஆற்றுவோம். ஒன்றிடம் ஒன்று கற்றுக் கொண்டு பிறது மேம்பாடுகளை உள்புகுத்தி பயன்படுத்துவதன் மூலம் எமது பாரம்பரிய மருத்துவ அமைப்புமுறை, மருத்துவ முறைக்குள்ளான முக்கிய பகுதியாக மாற முடியும்.

அவர் இவ்வாறு கூறினார்.

தியன்ஜின் அறிவிப்பை தவிர, பாரம்பரிய மருத்துவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் கூட்டறிக்கையை, பிரிக்ஸ் நாடுகள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டன. இந்த கூட்டறிக்கை பற்றி சீன மத்திய சுகாதார மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டு ஆணையத் துணைத் தலைவரும் சீனத் தேசிய பாரம்பரிய சீன மருத்துவ நிர்வாகத்தின் தலைவருமான வாங் கோஜியாங் பேசுகையில்

சுகாதாரம் மற்றும் உடல் நலப் பராமரிப்புத் துறையில் பராம்பரிய மருத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மதிப்பினை, பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் எல்லாம் அறிந்து கொண்டது. அதே சமயத்தில், தற்போது உலக நாடுகளில் மனிதர்களுக்கு புதிய சுகாதார பிர்ச்சினைகள் ஏற்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, உடல் நலமற்ற வாழ்க்கை முறையால் ஏற்படும் நோய்கள் பரவல், செலவிட முடியாத மருத்துவக் கட்டணம் உள்ளிட்டவை காணப்படுகின்றன. இந்த பிரச்சினைகளை சமாளித்து தீர்க்கும் வகையில், பிரிக்ஸ் நாடுகள் இந்தக் கூட்டறிக்கையை ஏற்றுக்கொண்டன என்றார் அவர்.

பாரம்பரிய மருத்துவ கல்வி மற்றும பயற்சியை கூட்டாக வலுப்படுத்துவது, பாரம்பரிய மருத்துவத்தின் மேம்பாடுகளை வெளிக்கொணர்வது, பாரம்பரிய மருந்துகளின் உற்பத்தியை வரையறைப்படுத்துவது, அறிவியல் வழிமுறையில் பாரம்பரிய மருத்துவத்தை ஆய்வு மற்றும் புதுமையாக்கம் செய்வது, பாரம்பரிய மருத்துவத்தில் ஈடுபடுபவர்களிடையே தொடர்பை ஊக்குவிப்பது ஆகிய 5 அம்சங்கள் கூட்டறிக்கையில் உள்ளடங்கும். எதிர்காலத்தில், அறிவியல் தொழில் நுட்பம், அறிவியல் ஆய்வு அனுபவம், திறன் உருவாக்கம், ஆய்வு மற்றும் வளர்ச்சித் திட்டம் ஆகியவை தொடர்பான பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்த பிரிக்ஸ் நாடுகள் இணைந்து செயல்படும் என்று தெரிகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040