• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தென் மேற்கு சிரியாவில் போர் நிறுத்த உடன்படிக்கை நடைமுறைக்கு வந்தது
  2017-07-10 09:43:26  cri எழுத்தின் அளவு:  A A A   

தென் மேற்கு சிரியாவில் போர் நிறுத்தத்தை மேற்கொள்வது பற்றி அமெரிக்கா, ரஷியா, ஜோர்டான் ஆகிய நாடுகள் 7ஆம் நாள் ஜோர்டான் தலைநகர் அம்மானில் உருவாக்கிய உடன்படிக்கை 9ஆம் நாள் நண்பகல் 12 மணி நேரத்தில் நடைமுறைக்கு வர துவங்கியது. அன்று இரவு வரை, போர் நிறுத்த பிரதேசங்களில் பெரிய அளவிலான ஆயுத மோதல்கள் நிகழவில்லை.

சிரியா அரசுப் படையும், அரசு எதிர்ப்பு ஆயுதப் படையும் அன்று போர் நிறுத்த உடன்படிக்கையைச் செயல்படுத்தியுள்ளன என்று சிரியா ராணுவ வட்டாரத்துடன் தொடர்புடைய ஒருவர் தெரிவித்தார். போர் நிறுத்த பிரதேசங்களைச் சேர்ந்த தேரா, குநைடெரா, ஸ்வேடியா உள்ளிட்ட மாநிலங்களின் நிலைமை அமைதியாக இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

போர் நிறுத்த பிரதேசங்களில் சில பகுதிகள் ஐ.எஸ் அமைப்பு உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளால் இன்னமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாலும், இஸ்ரேலுடன் ஒட்டியமைந்துள்ள பகுதிகளில் முன்பு இஸ்ரேல் படைகளால் பல முறை தாக்கப்பட்டதாலும், போர் நிறுத்தம் தொடர்வதில் உறுதித் தன்மையும், அறைகூவலும் இன்னமும் நிலவுகின்றன என்று சிரியாவில் உள்ள ஆய்வாளர்கள் சிலர் தெரிவித்தனர். (மீனா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி தொடங்கி  2 ஆண்டுகள் நிறைவு
• டீசல் பயன்பாட்டைக் குறைக்க தொடரியில் சூரிய தகடு
• ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான 2ஆவது சுற்று பேச்சுவார்த்தை முடிவு
• ஈரான்:அணு ஆற்றல் உடன்படிக்கை பற்றி பேச்சுவார்த்தை மீண்டும் நடத்தாது
• இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
• சீன-கத்தார் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
• பிரதேசப் பன்முகப் பொருளாதாரக் கூட்டாளி உறவுக்கான 19வது பேச்சுவார்த்தை
• ஆசிய பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்பீடு
• முதலாவது சீன-அமெரிக்கப் பன்முகப் பொருளாதாரப் பேச்சுவார்த்தை
• பாலஸ்தீன அரசுத் தலைவருடன் பேச்சுவார்த்தை
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040