• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் வேண்டுகோள்
  2017-07-10 14:35:41  cri எழுத்தின் அளவு:  A A A   

5 நாட்கள் நீடிக்கும் 26ஆவது ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் பேரவைக் கூட்டம் 9ஆம் நாள் பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க்கில் நிறைவடைந்தது. இக்கூட்டத்தில் மின்ஸ்க் அறிக்கை வெளியிடப்பட்டது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கடும் அறைகூவல் மற்றும் அச்சுறுத்தலைச் சமாளிக்கும் பொருட்டு, இவ்வமைப்பின் உறுப்பு நாடுகளின் அரசு மற்றும் நாடாளுமன்றத்துக்கு தொடர்புடைய யோசனைகளை மின்ஸ்க் அறிக்கை முன்வைத்துள்ளது. இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல், பயங்கரவாதம், தொடர்ந்து வரும் மோதல், மோசமாகி வரும் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புச் சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிலவும் பாதுகாப்பு அறைகூவல்கள் குறித்து இவ்வமைப்பின் உறுப்பு நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். பன்முகப் பாதுகாப்பு உத்தரவாதத்தில் பல துருவத் தூதாண்மை கொள்கையை நடைமுறைப்படுத்தி, முனைப்பான முறையில் சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க இவ்மைப்பின் உறுப்பு நாடுகள் பாடுபட வேண்டும் என்று இக்கூட்டம் வேண்டுகோள் விடுத்தது.

தவிர, தொடர்புடைய பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்க்க, இவ்வமைப்பின் உறுப்பு நாடுகள் பாடுபட வேண்டும் என்றும் இக்கூட்டம் வேண்டுகோள் விடுத்தது. (மீனா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி தொடங்கி  2 ஆண்டுகள் நிறைவு
• டீசல் பயன்பாட்டைக் குறைக்க தொடரியில் சூரிய தகடு
• ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான 2ஆவது சுற்று பேச்சுவார்த்தை முடிவு
• ஈரான்:அணு ஆற்றல் உடன்படிக்கை பற்றி பேச்சுவார்த்தை மீண்டும் நடத்தாது
• இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
• சீன-கத்தார் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
• பிரதேசப் பன்முகப் பொருளாதாரக் கூட்டாளி உறவுக்கான 19வது பேச்சுவார்த்தை
• ஆசிய பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்பீடு
• முதலாவது சீன-அமெரிக்கப் பன்முகப் பொருளாதாரப் பேச்சுவார்த்தை
• பாலஸ்தீன அரசுத் தலைவருடன் பேச்சுவார்த்தை
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040