• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாரிஸ் உடன்படிக்கையை ஆதரிக்கும் ஓபெக் அமைப்பு
  2017-07-10 14:46:35  cri எழுத்தின் அளவு:  A A A   

பாரிஸ் உடன்படிக்கை பற்றி 20 நாடுகள் குழுவின் நிலைப்பாட்டை ஓபெக் எனும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகள் ஆதரிப்பதாக இவ்வமைப்பின் தலைமைச் செயலாளர் முகமது பார்கின்டோ 9ஆம் நாள் தெரிவித்தார்.

துருக்கியின் இஸ்தான்பூலில் நடைபெற்ற உலக பெட்ரோலிய மாநாட்டில் அவர் பேசுகையில், அமெரிக்கா பாரிஸ் உடன்படிக்கையிலிருந்து விலகிய போதிலும், பாரிஸ் உடன்படிக்கையில் மாற்றம் செய்ய முடியாதது என்று 20 நாடுகள் குழுவின் இதர 19 உறுப்பு நாடுகள் ஒருமனதாக கருதுவதாகவும், ஓபெக் அமைப்பு இந்நிலைப்பாட்டை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார். ஓபெக் அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளும் இவ்வுடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

5 நாட்கள் நீடிக்கும் 22ஆவது உலக பெட்ரோலிய மாநாடு 9ஆம் நாளிரவு இஸ்தான்பூலில் துவங்கியது. பெட்ரோலியத் துறையில் நிலவும் அறைகூவலை எவ்வாறு சமாளிப்பது என்பது, நடப்பு மாநாட்டில் விவாதிக்கப்படும் முக்கிய அம்சமாகும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிக்குழுத் தலைவர்களுடன் ஷீ ச்சின்பிங்கின் சந்திப்பு
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை பற்றிய கருத்துரு அமெரிக்க செனெட் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
• அக்சா மசூதியில் மோதல்
• பிரிக்ஸ்நாடுகளின் பாதுகாப்பு அலுவல் பற்றிய உயர் நிலை பிரதிநிதி கூட்டம்
• பிரிக்ஸ் நாடுகளின் செய்தித் தொடர்பு அமைச்சர்கள் கூட்டம்
• வரித் துறை ஒத்துழைப்பு பற்றி பிரிக்ஸ் நாடுகளின் முதலாவது குறிப்பாணை
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040