• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-இந்திய பேச்சுவார்த்தைக்கு படையின் வெளியேற்றம் அடிப்படை
  2017-07-10 18:32:56  cri எழுத்தின் அளவு:  A A A   
எல்லை பாதுகாப்பு படைப்பிரிவை இருநாட்டு எல்லையின் இந்திய பக்கத்துக்கு அழைக்குமாறு இந்தியாவிடம் சீனா மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. சாராம்ச ரீதியான தொடர்பு மற்றும் பேச்சுவார்த்தை இருதரப்பும் நடத்துவதற்கு முன்நிபந்தனையும் அடிப்படையும் அதுவாகும். இந்தியத் தரப்பு இதற்காக உண்மையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என சீனா விரும்புவதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் 10ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக சீனாவுக்குள் நுழைந்த இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர் கூடாரங்களை அமைக்கத் தொடங்கியதாக தகவல் வெளியானது. இருதரப்பும் தூதாண்மை வழிமுறையில் இப்பிரச்சினையை தீர்க்க முடியுமா என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில், இத்தகவல் உண்மையாக இருந்தால், இந்தியாவின் இச்செயல் சீன-இந்திய எல்லையிலுள்ள சிக்கிம் பகுதியின் நிகழ்வு நிலையை வேண்டுமென்றே சீர்குலைக்கும் நோக்கத்தைத் தான் நிரூபிக்கும். இந்நிலையில் தூதாண்மை வழிமுறை பயன் இல்லை. ஆனால் இந்திய தரப்பு நடைமுறைக்கு ஏற்ற நடவடிக்கையை மேற்கொண்டால் தூதாண்மை வழிமுறையில் தடையில்லை. தற்போது சர்வதேச உறவுக்கான அடிப்படை விதியையும் சர்வதேச ஒழுங்கு முறையையும் இந்தியா அத்துமீறி, எல்லை பகுதியின் அமைதியைச் சீர்குலைத்துள்ளது. இந்தியப் படையினர் தங்கள் பகுதிக்கு உடனடியாகத் திரும்புமாறு சீனா கோருவதாக கெங் ஷுவாங் கூறினார்.(வான்மதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிக்குழுத் தலைவர்களுடன் ஷீ ச்சின்பிங்கின் சந்திப்பு
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை பற்றிய கருத்துரு அமெரிக்க செனெட் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
• அக்சா மசூதியில் மோதல்
• பிரிக்ஸ்நாடுகளின் பாதுகாப்பு அலுவல் பற்றிய உயர் நிலை பிரதிநிதி கூட்டம்
• பிரிக்ஸ் நாடுகளின் செய்தித் தொடர்பு அமைச்சர்கள் கூட்டம்
• வரித் துறை ஒத்துழைப்பு பற்றி பிரிக்ஸ் நாடுகளின் முதலாவது குறிப்பாணை
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040