அண்மையில், இந்தியாவின் வட மற்றும் வட கிழக்குப் பகுதிக்களில் பெய்த கடும் புயல் மழையால், 45 பேர் உயிரிழந்தனர். 5 இலட்சம் மக்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
வட இந்தியாவின் பிகார் உள்ளிட்ட பல மாநிலங்கள், இடிமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில், குறைந்தது 19 பேர் உயிரிழந்தனர்.
அதே வேளையில், வட கிழக்கு மாநிலமான அசாம் மாநிலத்தில், சில நாட்களாக தொடர்ந்து மண் அரிப்பு நிகழ்ந்தது. இதில், குறைந்தது 26 பேர் உயிரிழந்தனர். இம்மாநிலத்தில் சுமார் 40 ஆயிரம் ஹெக்டர் பயிர்கள் சீரழிந்துள்ளன. 5 இலட்சம் மக்கள் இதனால் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளநர்.
மீட்புதவிப் பணி ஏற்கனவே துவங்கியுள்ளதாகவும், உரிய நேரத்தில் மக்களுக்கும், மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உதவி வழங்கும் என்று இந்தியத் தலைமையமைச்சர் மோடி தெரிவித்தார்.